கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

கழுகார் பதில்கள்!

ஜி.குப்புசுவாமி, சென்னை-93.
அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன், ‘பிரசாரமும் செய்வேன்’ என்று கூறியிருக்கிறாரே நடிகர் கார்த்திக் (பழைய நடிகர்)?


அலைகள் ஓய்வதில்லை!  (நடிகர் கார்த்திக் என்றால் போதாதா... அதென்ன பழைய நடிகர்?)

ஆர்.கார்த்திகேயன், ஜோலார்பேட்டை.
வேலூர் கோட்டையில் காதலர்களுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இதைப் பற்றி கழுகாரின் அபிப்ராயம் என்னவோ?


தடை, காதலர்களுக்கா... காமுகர்களுக்கா என்பதை நன்றாக விசாரித்துச் சொல்லுங்கள்!

சாந்திமணாளன், கரூர்.
‘ரஜினிகாந்த் ரசிகர்கள் அ.தி.மு.க-வுக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது?


பாவம், பாண்டியராஜன். கூட்டுப்போடவும், ஓட்டுப் போடவும் ‘காந்தி’யைக் கையில் எடுத்துவிட்ட பிறகு ‘காந்த்’ பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close