“அனைத்து அதிகாரமும் ஒருவருக்கா?” - வசந்தகுமாருக்கு எதிராக வலுக்கும் குரல்! | Voices against Vasanthakumar in kanyakumari congress - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

“அனைத்து அதிகாரமும் ஒருவருக்கா?” - வசந்தகுமாருக்கு எதிராக வலுக்கும் குரல்!

ன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட தனக்குத்தான் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் ஹெச்.வசந்தகுமார். இதுகுறித்து, “எம்.பி பதவி என் நீண்டகால லட்சியம்!” என்கிற தலைப்பில் 3.3.19 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் வசந்தகுமாரின் பேட்டியை வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து, “ஏற்கெனவே, நாங்குநேரி எம்.எல்.ஏ., தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் என இரு பதவிகளை வகிக்கும் வசந்தகுமார், மேலும் பதவிக்காக ஆசைப்படுவது முறையல்ல” என்ற முணுமுணுப்பு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே எழுந்துள்ளது.

[X] Close

[X] Close