எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ் | Parliament Election Express - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

தலையெடுத்த தமையன்!

ஜெ
யலலிதா பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக அ.தி.மு.க சார்பில் ஒரு லட்சத்து 71 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி லட்சுமிபுரம் அருகே நடைபெற்றது. விழா ஏற்பாடுகள் அனைத்தையும் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் கவனித்துக்கொண்டார். விழா ஆரம்பித்த பிறகு மேடையில் பேசிய ரவீந்திரநாத்குமார், “தேனி மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருக்கும் ஒன்றிய மற்றும் நகரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் பெயர் சொல்லி ஒவ்வொருவராக அழைப்பேன். அவர்கள் சத்தமிட்டுத் தங்கள் இருப்பைப் பதிவுசெய்யவேண்டும்” என்றார். இதனைக் கவனித்த ஓ.பி.எஸ் லேசாகப் புன்னகைத்தார். ‘கட்சிக்குள் இருக்கும் சிக்கல்களை ரவி வெளிப்படையாகப் புரிந்துகொண்டுள்ளார்; இனி அவர் தலையெடுத்துவிடுவார்’ என்று தனது சகாக்களிடம் ஓ.பி.எஸ் கூறியிருக்கிறார்.

ஆளுக்கு ஒரு கூட்டம்!

ஜெ
யலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் கடந்த வாரம் ராமநாதபுரத்தில் நடந்தது. அமைச்சர் மணிகண்டனால் நடத்தப்பட்ட கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் முனியசாமி, தொகுதி எம்.பி அன்வர்ராஜா ஆகியோர் பங்கேற்கவில்லை. அதேநாளில் முதுகுளத்தூரில் நடந்தப் பொதுக்கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் முனியசாமி, அவரின் மனைவி கீர்த்திகா மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சரான ராஜகண்ணப்பன் தொகுதியில் பரவலாக உள்ள தன் சமுதாய வாக்குகளைக் குறிவைத்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்.

[X] Close

[X] Close