வேலூர் ரெய்டு விவகாரம்... பின்னணியில் பி.ஜே.பி சாமியார்? | IT raids on minister Veeramani, friends premises in Vellore - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

வேலூர் ரெய்டு விவகாரம்... பின்னணியில் பி.ஜே.பி சாமியார்?

மிழக அமைச்சர் கே.சி.வீரமணியின் நெருக்கமானவர்களுடைய வீடுகள், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் நடைபெற்ற வருமானவரிச் சோதனைகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரூ.300 கோடி மதிப்புள்ள நில விவகாரத்தில் சிலரைத் தப்பிக்க வைக்கவும், அரசியல்ரீதியாக அமைச்சர் வீரமணிக்கு செக் வைக்கவும் பி.ஜே.பி சாமியார் ஒருவரின் பின்னணியில், இந்த வருமானவரிச் சோதனை நடைபெற்றது என்று வேலூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ‘சாய்சிட்டி சென்டர்’ நிலம் விவகாரம் தொடர்பாக வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த நிலம் கைமாறியதில் ‘ஒப்பந்தப்படி பணம் கொடுக்காமல் அமைச்சர் வீரமணியை வைத்து சேகர்ரெட்டி மிரட்டுகிறார்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து 16.12.18 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், “வேலூரில் ரூ.300 கோடி நிலம் அபகரிப்பு... அமைச்சர் வீரமணியுடன் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டு?” என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

[X] Close

[X] Close