யாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு! | Discuss about Parliament Election Contestants - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

யாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கெல்லாம் வேட்பாளர் வாய்ப்பு என்பது குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை. கடந்த இதழின் தொடர்ச்சி இது...

சேலம்: தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே இந்த முறையும் இத்தொகுதி ஒதுக்கப்படலாம். ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகனும் மாநில காங்கிரஸ் செயல் தலைவருமான மோகன் குமாரமங்கலம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு, வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ராமசுகந்தன் என்று பட்டியல் நீள்கிறது. மோகன் குமாரமங்கலத்துக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். ஒருவேளை தி.மு.க போட்டி யிட்டால் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபு, துர்கா ஸ்டாலினின் நெருங்கிய தோழி உமாராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியனின் மருமகனான டாக்டர் தருண் ஆகியோர் வரிசை கட்டுகிறார்கள். அதிருப்திகளைச் சரிகட்ட வீரபாண்டி குடும்பத்தில் ஒருவருக்கு யோகம் அடிக்கலாம்.

அ.தி.மு.க தரப்பில் எடப்பாடியின் மகன் மிதுன் சக்ரவர்த்தி, சிட்டிங் எம்.பி-யான பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்டத் தலைவர் ஆர்.ஆர்.சேகரன், அஸ்தம்பட்டி பகுதிச் செயலாளர் சரவணன், மாவட்ட வழக்கறிஞர் அணிச் செயலாளர் ஐயப்பமணி, வட்டச் செயலாளர் செல்வராஜ் என 32 பேர் போட்டியிட விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். சிட்டிங் எம்.பி-க்கு சீட் இல்லை என்கிறார்கள். கடந்த தேர்தலில் சேலம் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியால் ஜெயலலிதாவிடம் பரிந்துரை செய்யப்பட்டவர் ஆர்.ஆர்.சேகரன். இம்முறையும் அவரே முதல்வரின் குட் புக்கில் இருக்கிறார். பா.ம.க-வுக்கு தொகுதி போனால், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அருளுக்கு அதிக வாய்ப்பு. அ.ம.மு.க-வில் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.செல்வத்துக்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.

[X] Close

[X] Close