கணவாய் மீன்களைப் பிடிக்க வெளிநாட்டுக் கப்பல்கள்? | Foreign ship in arabian sea for fishing Kanava fish - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

கணவாய் மீன்களைப் பிடிக்க வெளிநாட்டுக் கப்பல்கள்?

அரபிக்கடலில் அபயக்குரல் எழுப்பும் மீனவர்கள்...

‘அரபிக்கடலில் தமிழகத்தின் கன்னியாகுமரி தொடங்கி, கேரளத்தின் வடஎல்லை வரையில் கடற்கரையிலிருந்து 100 - 150 நாட்டிக்கல் மைலுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 25.2 லட்சம் டன் கணவாய் மீன்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.மீனவர்களால் பிடிக்கப்படாத இந்த மீன்களைப் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று மத்தியக் கடல்வள ஆய்வு நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு, வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களை மீன் பிடிக்க அனுமதிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளதாகவும், இதனால் பாரம்பர்ய மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், கன்னியாகுமரி மீனவர்கள் அபயக்குரல் எழுப்புகிறார்கள்.

இந்த பிரச்னையில் அரசுத் தரப்பு முயற்சிகளுக்கு எதிராகக் குரல்கொடுத்துவரும் நெய்தல் மக்கள் இயக்க நிர்வாகி ‘குறும்பனை’ பெர்லினிடம் பேசினோம். “மத்திய கடல்வள ஆய்வு நிறுவனம்,    ‘கடற்கரையிலிருந்து 100 முதல் 150 நாட்டிக்கல் மைலுக்கு உட்பட்ட பகுதியில் 25.2 லட்சம் டன் கணவாய் மீன்கள் உள்ளன. கன்னியாகுமரி, கேரள கடல் பகுதிகளில் ஆண்டுக்கு 6.3 லட்சம் டன் கணவாய் மீன்களைப் பிடிக்க முடியும். கொச்சி, மங்களூர், கோவா துறைமுகங்களை மையமாகக்கொண்டு கணவாய் மீன்களைப் பிடிக்க உரிய ஏற்பாடு செய்யவேண்டும்’ என்று சமீபத்தில் வெளியிட்ட தன் ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. மேலும், செயற்கை விளக்கொளியைப் பயன்படுத்தி கணவாய் மீன்களைப் பிடிப்பதையும் அந்த ஆய்வறிக்கை ஊக்கப்படுத்துகிறது.

[X] Close

[X] Close