ஆஹான் | Best Status of Twitter and Facebook - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

ஆஹான்

BoopatyMurugesh

அ.தி.மு.க கூட்டணியில் இணைகிறது தே.மு.தி.க.

கேப்டன்: எனக்கு வேற வழி தெரியல ஆத்தா..

 sultan_Twitz

அ.தி.மு.க கூட்டணிக்கு கண்டிப்பாக தே.மு.தி.க வரும் - பொன்னார்

#வரலைன்னா வீட்டுக்கு ரெய்டு வரும் ஓவர்..?!

 luckykrishna

எல்லையில் ராணுவவீரன் என்றவர்களெல்லாம் ‘போர் என்றால் சாகத்தான் செய்வார்கள்’ என்கிறார்கள்.

‘எல்லையிலே’ டயலாக்குக்கு காண்டாகி அப்போது ஏடிஎம் கியூவில் நின்னுக்கிட்டே ராணுவத்தைக் கிண்டலடித்தவர்கள் எல்லாம், இன்னைக்கு அபிநந்தனுக்காக பதறுகிறார்கள்.

யார் உண்மையான தேசபக்தன்?

teakkadai1

அரசியல் லாபத்துக்காக முதலில் வருமானவரித் துறையை உபயோகப்படுத்தினார்கள். பின் சி.பி.ஐ-யை, பின் நீதித்துறையை, இப்போது ராணுவத்தையும். இனி வேறு எதுவும் இல்லை.

 thalabathe

அனுப்புன்னு சொன்னா உடனே அனுப்பிட்டான்... இவன்ட பேச்சுக் கொடுத்தா ஈஸியா பாகிஸ்தானை எழுதி வாங்கிடலாம்டா - வடிவேலு மாம்ஸ்

skpkaruna

உலக அளவில் விமானப்படைகளின் திறன் அறியும் போட்டிகள் நடத்தப்படும் போதெல்லாம் முதல் மூன்று இடங்களுக்குள் இந்திய விமானப்படை வரத் தவறியதே இல்லை. இந்திய போர்விமானிகளின் திறமை உலகின் ஆகச் சிறந்த ஒன்று. இத்தனையும் அரதப்பழசான விமானங்களைக் கொண்டு செய்யப்படும் சாதனை.

MdIbrahimSiraj

இந்தியா குண்டுகளை வீசி எங்கள் மரங்களை ஒடித்துவிட்டது- ஐ.நா-வில் புகார் அளித்த பாகிஸ்தான்.

“புரிஞ்சுருச்சு ஜீ... மரத்தைலாம் ஒடிச்சுவிட்டுட்டா மழை பெய்யாது. மழை இல்லன்னா பஞ்சம் வந்து பாகிஸ்தான் அழிஞ்சுபோயிரும்.. அதான உங்கத் திட்டம்.”

yugarajesh2

அ.தி.மு.க-வும் - தி.மு.க-வும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைப் பார்க்கும்போது, IPL-க்கு ஆளுங்களை ஏலம் எடுக்கிற மாதிரியே இருக்கு.

yugarajesh2

இன்னும் நடிச்சுக்கிட்டே இருக்கணும்னு நினைச்ச கமல் அரசியலுக்கு வந்திட்டாரு;

அரசியலுக்கு வரணும்னு நினைச்ச ரஜினி இன்னும் நடிச்சுக்கிட்டு இருக்காரு.

drkvm

மு.க.ஸ்டாலினுடன் ,பாரிவேந்தர் சந்திப்பு

# “ஒரு” ஓட்டு உறுதி...

ShivaP_Offl

ஓட்டை விலைகொடுத்து வாங்குபவர்களால்,

இந்த நாட்டையே என்ன விலைக்கு வேண்டுமானாலும் விற்க முடியும்...

RazKoLu

எந்த கட்சில சீட் அதிகம் கெடைக்குமோ, அங்க கூட்டணின்னு ஓப்பனாவே இருக்கு கேப்டன் கட்சி!

mekalapugazh

எங்கே முகிலன் என்பவர் ஒரு விழுக்காட்டினருக்கும் கீழே..

யார் முகிலன் என்பவரே பெரும்பெரும்பான்மை..

Vicky_stirring

அ.தி.மு.க கூட்டணிக்குக் கண்டிப்பாக தே.மு.தி.க வரும் - பொன்னார்

#வானிலை அறிக்கை ரமணன் ரேஞ்சுக்கு கணிக்கிறாரு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close