பாலியல் பலாத்காரம்... வீடியோ பதிவு... பணம் பறிப்பு! - பொள்ளாச்சி பயங்கரம்... | Sexual assault gang in Pollachi - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

பாலியல் பலாத்காரம்... வீடியோ பதிவு... பணம் பறிப்பு! - பொள்ளாச்சி பயங்கரம்...

பொள்ளாச்சியில் நான்கு இளைஞர்கள், ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதை வீடியோ எடுத்தும் வெளியிட்டிருக்கிறார்கள். தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் இப்படி ஒன்று, இரண்டல்ல... நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை அந்தக் கும்பல் சீரழித்து, வீடியோ பதிவு செய்திருக்கும் அதிரவைக்கும் உண்மை வெளிவந்திருக்கிறது. சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகார் மூலம் இவர்களின் அட்டூழியங்கள் வெளியே வர... ஒட்டுமொத்த பொள்ளாச்சியும் அதிர்ந்துகிடக்கிறது.

இந்தக் கும்பலின் லீலைகளை அம்பலப்படுத்திய, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் பேசினோம். ‘‘அந்தப் பொண்ணு பேர் உமா. (பெயர் மாற்றப் பட்டுள்ளது) பொள்ளாச்சியில் ஒரு கல்லூரியில் செகண்டு இயர் படிக்குது. ஓரளவுக்கு வசதியான பொண்ணு. திடீர்னு ஒருநாள் தற்கொலை பண்ணிக்கப்போயிருச்சு. நல்லவேளை வீட்ல பார்த்துக் காப்பாத்திட்டாங்க. என்ன ஏதுன்னு விசாரிச்சப்பதான், உமா தனக்கு நேர்ந்ததை சொல்லுச்சு. பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த சபரிராஜன் ஃபேஸ்புக் மூலமா உமாகிட்ட பழகியிருக்கான். காதலிக்கிறதா அவன் சொன்ன வார்த்தைகளை நம்பி, உமா ‘அவுட்டிங்’ போயிருக்கு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close