யாருக்கு என் வாக்கு... கேள்வி கேட்டால் சிறையா? | Social Activists comments on Electronic Voting Machine issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

யாருக்கு என் வாக்கு... கேள்வி கேட்டால் சிறையா?

ந்த நாடாளுமன்றத் தேர்தல் நியாயமாக நடக்குமா என்பது குறித்த சர்ச்சைகளும் சந்தேகங்களும், வழக்கத்தைவிட இந்தமுறை சற்று அதிகமாகவே எழுந்துள்ளன. ‘மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை, ஹேக் செய்ய முடியும்’ என்று லண்டனில் ஒருவர் போட்ட ‘டெமொ’ குண்டு, இதை அதிகப்படுத்தியது. ஆனால்,  வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பானவைதான் என விரிவாக விளக்கம் தந்தது, தேர்தல் ஆணையம். கூடுதலாக, வாக்குப்பதிவு எந்திரத்தின்மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்தும் வகையில், வி.வி.பி.ஏ.டி என்ற புதிய வசதி, வரும் தேர்தல் வாக்குப்பதிவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வாக்காளர், தான் எந்தச் சின்னத்தில் வாக்களித்தார் என்பதை, வாக்குப்பதிவு எந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள வி.வி.பி.ஏ.டி. (Voter verifiable paper audit trail –V.V.P.A.T) திரையில் பார்த்துக் கொள்ளலாம். சுமார் 20 நொடிகள் அவர் வாக்களித்த சின்னம் ஒளிரும் என்று சொல்லப்படுகிறது.

அதில் ஒருவர் வாக்களித்த சின்னம் மாறி வந்திருந்தால், எந்திரத்தில் கோளாறு என்று புகார் அளிக்கலாம். கோளாறு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் வாக்கெடுப்பு நிறுத்திவைக்கப்படும். இதுபற்றி, சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹு, ‘‘நவீன வாக்குப்பதிவு எந்திரத்தில், தான் வாக்களித்த சின்னம் மாறியுள்ளதாக யாராவது பொய் சொல்லி, அது நிரூபணமானால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது” என்று கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில், தேர்தல் அதிகாரியின் இந்தப் பேச்சு, சாமானிய மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகப் பல்வேறு தரப்பிலும் அதிருப்திகள் கிளம்பியுள்ளன. இதுபற்றி சட்டம் அறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள்?

[X] Close

[X] Close