மீண்டும் ஜாபர்சேட்! - அரசு ஆடும் ஐ.பி.எஸ் ஆட்டம்... | Jaffer Sait posted CBCID head - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/03/2019)

மீண்டும் ஜாபர்சேட்! - அரசு ஆடும் ஐ.பி.எஸ் ஆட்டம்...

‘சொத்துக்குவிப்பு வழக்கு நடக்கும் பெங்களூருக்கு நீங்கள் சென்றால், உங்களைச் சிறைப்பிடிப்பார்கள். அங்கே போவதைத் தவிர்க்கவும்!’ - 2014-ம் வருடம் செப்டம்பர் மாதத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இப்படி ‘நோட்’ அனுப்பினார், தமிழக உளவுத்துறை ஐ.ஜி-யான அம்ரேஷ் புஜாரி. அதைப்படித்த ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார். இதர அதிகாரிகளிடம் இதுகுறித்து கிராஸ் செக் செய்தார் ஜெயலலிதா. அவர்களோ, ‘உங்களைச் சிறைப்பிடிக்கமாட்டார்கள். புஜாரி தவறான தகவலைக் கொடுத்துவிட்டார்’ என்றார்கள். அடுத்த சில நாள்களில், போலீஸ் அகாடமிக்குத் தூக்கியடிக்கப்பட்டார் புஜாரி. அதே மாதம் செப்டம்பர் 27-ம் தேதியன்று பெங்களூரு சென்ற ஜெயலலிதா, அப்படியே பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அனுப்பப்பட்டார். ஒட்டுமொத்தக் காவல்துறையும் அப்போதுதான் புஜாரியைத் திரும்பிப்பார்த்தது!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புஜாரி, 1991 பேட்ஜ் ஐ.பி.எஸ் அதிகாரி. நேர்மையும், நுண்ணறிவும் மிக்கவர். அதே அம்ரேஷ் புஜாரிதான், தற்போது அருப்புக்கோட்டை கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் ஆரம்பித்து, முகிலன் மர்மமான முறையில் காணாமல்போனது வரை முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி பிரிவின் கூடுதல் டி.ஜி.பி ஆக இருந்துவந்தார். அவரைத் தான் இப்போது மீண்டும் வண்டலூரில் உள்ள போலீஸ் அகாடமிக்கு தூக்கியடித்துள்ளது தமிழக அரசு. “அரசு சொன்னதைச் செய்திருந்தால், சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி என்ற பதவியைப் பெற்றிருக்க வேண்டியவர், இவர். அதை மறுத்ததால், மீண்டும் வண்டலூருக்குப் போயிருக்கிறார்” என்கிறார்கள் அவரைப்பற்றி அறிந்த நேர்மையான போலீஸ் அதிகாரிகள்.

[X] Close

[X] Close