ஜெயலலிதா கனவுகளை நனவாக்குகிறோம்! - தமிழகத்தில் உருகிய மோடி... | Modi visit in Tamil Nadu for Election campaign - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/03/2019)

ஜெயலலிதா கனவுகளை நனவாக்குகிறோம்! - தமிழகத்தில் உருகிய மோடி...

னவரி 27-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை 40 நாள்களுக்குள் நான்குமுறை தமிழகத்துக்கு விசிட் அடித்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார், பிரதமர் மோடி. நான்காவது முறையாக மார்ச் 6-ம் தேதி சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற அரசு விழா, அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியின் சார்பில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் மோடி பங்கேற்றார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, மார்ச் 6-ம் தேதி பொதுக்கூட்டம் நடந்த பகுதிக்கு அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்துக்கு கூட்டம் சேர்ப்பதற்காகத் திருப்பிவிடப்பட்டன. மதியம் ஒரு மணியிலிருந்தே பொதுக்கூட்டத்துக்கு வந்த தொண்டர்களை உள்ளே அடைத்துவைக்கத்தொடங்கினார்கள். உள்ளே சென்றவர்கள் கடுமையான வெயில் காரணமாகத் தலையில் துணியைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close