எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ் | Parliament Election Express News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/03/2019)

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

களம் இறங்கும் கதர் வாரிசுகள்!

நா
டாளுமன்றத் தேர்தலில் களம் இறங்குவதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் வாரிசுகள் அலைமோதுகின்றனர். கார்த்தி சிதம்பரம், ஆருண், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் ரிசர்வ் செய்துவிட்டார்கள் என்கிறார்கள். நாகர்கோவில் தொகுதிக்காக எம்.எல்.ஏ-க்கள் வசந்தகுமார், விஜயதரணி இடையே கடும் போட்டி நடக்கிறது. நாகர்கோவிலை கிறிஸ்துவ நாடார் சமூகத்தைச் சார்ந்தவருக்குக் கொடுக்க வேண்டும் என்று ஒரு குரூப் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளது. ‘‘அப்படிக் கொடுத்தால், இந்து நாடார்கள் ஒன்றிணைத்து பி.ஜே.பி-யை ஜெயிக்க வைத்து விடுவார்கள். எனவே, இந்து நாடாரான ராணி வெங்கடேசனுக்கு சீட் கொடுக்கலாம்’’ என ப.சிதம்பரம் தரப்பு ஆலோசனை வழங்கியுள்ளது. தென்சென்னை தொகுதியை குஷ்பு எதிர்பார்க்கிறார். அதேசமயம், தி.மு.க தரப்பில் தமிழச்சி தங்கப்பாண்டியனும் தென்சென்னையை எதிர்பார்க்கிறார்.

[X] Close

[X] Close