யாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு! | Discuss about Parliament Election Contestants - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/03/2019)

யாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கெல்லாம் வேட்பாளர் வாய்ப்பு என்பது குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை. கடந்த இதழின் தொடர்ச்சி இது...

கள்ளக்குறிச்சி

அ.
தி.மு.க கூட்டணியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசியும், முன்னாள் அமைச்சர் மோகனின் தீவிர ஆதரவாளருமான சிட்டிங் எம்.பி காமராஜுக்கே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அதேநேரம் தனது மகன் நமச்சிவாயத்துக்கு எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்று சென்னையில் டேரா போட்டிருக்கிறார் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ-வும், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளருமான குமரகுரு. தற்போதைய நகரச் செயலாளராக இருக்கும் ஷ்யாம் சுந்தரின் பெயரும் பட்டியலில் இருக்கிறது. ஒருவேளை அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்டால், இந்தத் தொகுதியில்  எல்.வெங்கடேசன் களமிறங்கலாம். தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்தத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்ட மணிமாறனையே நிறுத்த முடிவு செய்திருக்கிறார்களாம். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியின் பெயரும் அடிபடுகிறது. இவர்கள் இருவரில் ஒருவர்தான் தி.மு.க வேட்பாளர் என்பதே தற்போதைய நிலவரம்.

[X] Close

[X] Close