“வைகோ, திருமாவுக்கு சட்டச்சிக்கல்!” - எச்சரிக்கும் ஜவாஹிருல்லா | Manithaneya Makkal Katchi leader Jawahirullah interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/03/2019)

“வைகோ, திருமாவுக்கு சட்டச்சிக்கல்!” - எச்சரிக்கும் ஜவாஹிருல்லா

2016 சட்டமன்றத் தேர்தலில், மனித நேய மக்கள் கட்சிக்கு நான்கு இடங்களைக் கொடுத்து அழகு பார்த்த தி.மு.க., இந்தமுறை அந்தக் கட்சிக்கு சீட் எதுவும் ஒதுக்கவில்லை. இதனால், கொதிநிலையில் இருக்கும் அந்தக் கட்சியின் தொண்டர்கள் சமூகவலைதளங்களில் தி.மு.க-வை வறுத்தெடுத்துவருகின்றனர். 

இந்நிலையில், ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லாவைச் சந்தித்துப் பேசினோம்.

“நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ம.ம.க-வின் தற்போதைய நிலை என்ன?’’

“வருகிற 9-ம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும். அதில், தேர்தலை எதிர்கொள்வது குறித்து செயற்குழு உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டு முடிவுசெய்வோம்.’’

“நீங்கள், ‘உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது’ என்று தெரிவித்ததுடன், திருநெல்வேலி தொகுதியைக் குறிவைத்துக் கேட்டதால்தான், தி.மு.க கூட்டணியில் உங்கள் கட்சிக்கு இடம் ஒதுக்கப்படவில்லை என்கிறார்களே... உண்மையா?’’

“தொகுதி பேச்சு வார்த்தை அளவுக்கு எல்லாம் போகவே இல்லை. ஆனால், ‘உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது’ என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம், இருக்கிறோம். காரணம், பதிவுசெய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் வேட்பாளர், வேறொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு முரணானது. எனவே, நாங்கள் அதில் விட்டுக்கொடுக்கவில்லை. எங்களது இந்த உறுதியான நிலைப்பாடே, சீட் கிடைக்காமல் போனதற்கான காரணமாகவும் இருக்கலாம்.’’

[X] Close

[X] Close