கீதாஜீவன் பேச்சு... தி.மு.க-வுக்கு பாதகமா? - தூத்துக்குடி சர்ச்சை! | DMK MLA Geetha Jeevan Controversial speech audio - Junior vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/03/2019)

கீதாஜீவன் பேச்சு... தி.மு.க-வுக்கு பாதகமா? - தூத்துக்குடி சர்ச்சை!

“சாதி மோதலை உருவாக்கும்விதமாகப் பேசினார்” என்று தி.மு.க எம்.எல்.ஏ கீதாஜீவன்மீது புகார் எழுந்துள்ளது. கீதாஜீவன் பேசியதாக தேர்தல் நேரத்தில் வெளியாகியிருக்கும் ஆடியோவால், தி.மு.க-வுக்கு பின்னடைவு ஏற்படுமோ என்று அதன் நிர்வாகிகள் அச்சமடைந்துள்ளனர்.

தூத்துக்குடி எம்.எல்.ஏ-வான கீதாஜீவன் ஒரு நபரிடம் பேசுவதாக ஆடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அந்த ஆடியோவில் கீதாஜீவன், ‘பட்டியல் இனத்தில் உள்ள ஏழு சமுதாயங்களைச் சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை கலைஞர் முதல்வராக இருந்தபோதே வந்தது. அதைப் பரிசீலிக்கவும் அதுதொடர்பாக அந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்களிடம் ஒப்புதல் கேட்டு அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பரிசீலனை செய்வோம் என்றுதான் ஸ்டாலினும் பேசியிருக்கிறாரே தவிர, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட மாட்டோம்’ என்று அந்த நபரிடம்  சமாதானப்படுத்தும் வகையில் கீதாஜீவன்  பேசத்தொடங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘இந்தக் கோரிக்கையை ஆதரித்து கோவில்பட்டிக்கு கனிமொழி வந்தபோதே சைவ வேளாளர் அமைப்பைச் சேர்ந்த சிலர் மனுக் கொடுத்தார்கள். உங்களுக்கு அதில் விருப்பம் இல்லையென்றால், உங்களுடைய எதிர்ப்புக் கருத்தைப் பதிவு செய்யும் வகையில் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் அரசு குழுவின் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மாவிடம் மனுக் கொடுங்கள். கனிமொழி, ஸ்டாலின், அனைத்துக் கட்சித் தலைவர்கள், அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் உங்கள் எதிர்ப்புக் கருத்தைத் தெரிவிக்கும் வகையில் மனுக் கொடுங்கள். டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் மனு அனுப்புங்கள். அதில், ‘எங்களுடைய வேளாளர் பெயரைச் சேர்க்கக் கூடாது. முக்குலத்தோர் என இருப்பதுபோல தேவேந்திர குலத்தோர் என வைத்துக்கொள்ளுங்கள்’ என எழுதி அனுப்புங்கள். இது உங்களின் உரிமை. அதற்கு மரியாதை கொடுத்துக் கேட்க வேண்டியது அரசியல்வாதிகளின் கடமை’ என்று பேசுகிறார்.

[X] Close

[X] Close