தேவேந்திர குல வேளாளர்! - பெயர் மாற்றம்... சட்டத்தின் சாத்தியங்கள் என்ன? | Devendra Kula vellalar - Caste name changing issue - Juniro Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/03/2019)

தேவேந்திர குல வேளாளர்! - பெயர் மாற்றம்... சட்டத்தின் சாத்தியங்கள் என்ன?

டுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அரசியலில் சாதி பேசப்படாமல், சாதிக்காக அரசியல் பேசப்படும் காலம் இது. சாதியக் கட்டுடைப்பு என்பதை முன்னெடுக்காமல், சாதியப் பாதுகாப்பை முன்னிறுத்தும் அரசியல் சூழ்நிலையே இன்று நிலவுகிறது. ‘ஆதிதிராவிடர் இனப்பிரிவுகளில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன் ஆகிய ஆறு பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் நிபுணர் குழு அமைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இது சாத்தியமா, அப்படி மாற்றப்பட்டால் எஸ்.சி பிரிவிலிருந்து பி.சி பிரிவுக்கு உடனே மாற்றப்படுவார்களா,  இதனைச் சட்டரீதியாகச் செயல்படுத்தும் முறைகள் என்ன, இதனால் இடஒதுக்கீட்டில் மாற்றம் வருமா? என்று பல கேள்விகள் எழுகின்றன.

[X] Close

[X] Close