மிஸ்டர் மியாவ் | Mr Miyav: Cinema news - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

மிஸ்டர் மியாவ்

ம்யூட்

* திருமணத்துக்காக மதம் மாறிய வாரிசு நடிகருக்கு அடுத்த மாதம் டும் டும் டும். திருமணத்தை எளிமையாக வீட்டிலேயே வைத்துக்கொள்ள முடிவுசெய்திருக்கிறார்களாம்!

* பெண் பேய் பெயர் கொண்ட படத்தின் மூன்றாவது பாகம், ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. காரணம், படத்தின் இயக்குநரும் நடிகருமான மாஸ்டர்தானாம். திரும்பவும் ஷூட்டிங் போவதாக அவர் சொல்ல... தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் உள்ளதாம்!

* வரலாற்றுச் சிறப்புமிக்க நாவலைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்த இயக்குநரின் கதையிலிருந்து, அடுத்தது ஹீரோக்கள் விலகிக்கொள்ள, தற்போது அந்த லிஸ்ட்டில் வம்பு நடிகரும் சேர்ந்துகொண்டராம். காரணம், சிவக்கச் சிவந்த சிவமானவராம்.

* சமீபத்தில் தன் பிறந்தநாளைக் கொண்டாடினார், வரம் நாயகி. பிறந்தநாளை முன்னிட்டு இவருக்கு ஆசையாக ஒரு பட்டம் வழங்கியது, ஒரு குரூப். ‘அந்தப் பட்டம் எங்கள் நாயகிக்குச் சொந்தமானதாக்கும்...’ என்று பொங்கிவிட்டார்கள், இன்னொரு முன்னணி நாயகியின் ரசிகர்கள்.


அறிமுகமான காலம் தொட்டு அதே இளமையுடன் இன்றைக்கும் சினிமாவில் ஜொலித்துவருபவர், நடிகை த்ரிஷா. அவர் வசித்துவரும் ஆழ்வார்பேட்டை ஏரியாவில் இந்த வாரம் வலம்வந்தார் மிஸ்டர் மியாவ்.

* வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனது த்ரிஷாதானாம். ஆனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக, அதில் அவரால் நடிக்கமுடியாமல் போய்விட்டது.

[X] Close

[X] Close