“அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை!” - அல்லாடும் ஏழை நோயாளிகள்... | No medicines in TN government hospitals: Poor patients suffers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

“அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை!” - அல்லாடும் ஏழை நோயாளிகள்...

வீதிக்கு வீதி கார்ப்பரேட் மருத்துவமனைகள் முளைத்துக்கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் இன்றும் லட்சக்கணக்கான ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். அத்தகைய அரசு மருத்துவமனைகளில் கடந்த சில வாரங்களாக, அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை ஊழியர்களே குமுறுகிறார்கள்.

இங்குள்ள பொதுத்துறை நிறுவனங்கள், மருந்து உற்பத்தியைக் கிட்டத்தட்ட நிறுத்தி விட்டன. தனியார் நிறுவனங்களிடமிருந்தே மருந்துகளை அரசு கொள்முதல் செய்கிறது. மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் பெரும்பாலும் சீனாவிலிருந்தே வாங்கப்படுகின்றன. சமீபகாலமாக, அங்கிருந்து மூலப்பொருள்கள் வருவது குறைந்ததே, தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். தவிர, செயற்கையானத் தட்டுப்பாட்டை உருவாக்கி, மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக மருத்துவச் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். 

[X] Close

[X] Close