நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு! | 33% Quota for Women in Lok sabha: From possibilities to impossibilities - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு!

சாத்தியம் முதல் அசாத்தியங்கள் வரை!

நெடுங்காலமாக மக்கள் பிரதிநிதிகளை ஆண்களே தேர்ந்தெடுத்தனர். ‘பெண்களின் வாக்குரிமை, மனித உரிமை’ என்று பெண்கள் குரல் கொடுக்க 18-ம் நூற்றாண்டுவரை காத்திருக்க வேண்டியிருந்தது. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வாக்குரிமை பெற்றவர்கள் வேட்பாளர்களாகவும் உரிமை பெற்றார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை 1921-ல் மதராஸ் மாகாணம்தான், பெண்களுக்கான வாக்குரிமையை அமலுக்குக் கொண்டுவந்தது. அதுவும் சொத்துடைமை உள்ள ஆண், பெண்களுக்கு மட்டுமே. அதற்கடுத்த வருடங்களில்தான், அனைவருக்குமான வாக்குரிமை அமலுக்கு வந்தது. 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பெண் பிரதிநிதித்துவம் 11 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. ஆனாலும், சர்வதேச அளவில் பெண் பிரதிநிதித்துவம் 23.4 சதவிகிதம் என்பதுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவு. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. மாறியிருக்கிறதா நிலைமை?

1996-ல் தேவகவுடா தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா, கட்சிகளின் உள்ஒதுக்கீடு முரண்பாடு களால் இன்னும் நாடாளுமன்றத்தையே கடந்து வரமுடியவில்லை. 2014-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை தனது வாக்குறுதிகளில் ஒன்றாகவே முன்மொழிந்தது பி.ஜே.பி. ‘2019 தேர்தலில் வெற்றிபெற்றால், முதல் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்’ என வாக்குறுதி அளித்திருக்கிறது, காங்கிரஸ். உள்ளாட்சிகளில் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழகத்தில் முதன்முதலில் நடைமுறைப்படுத்தியது, தி.மு.க. அதையே, 50 சதவிகிதமாக உயர்த்திச் சட்ட முன்வடிவைக் கொண்டுவந்தது, அ.தி.மு.க. பெண்களுக்கான இடஒதுக்கீட்டை இத்தனை கட்சிகள் ஆதரித்தாலும், 2014 தேர்தலில் தமிழகத்திலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் நான்கு பேர் மட்டுமே. மொத்தம் உள்ள 543 தொகுதிகளிலிருந்து 66 பெண் பிரதிநிதிகள் மட்டுமே மக்களவையில் இடம்பெற்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close