தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம்! - ம.ஜ.த மாநிலத் தலைவர் முகம்மது இஸ்மாயில் | Interview with Janata dal (Secular) TN state president Mohammed Ismail - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம்! - ம.ஜ.த மாநிலத் தலைவர் முகம்மது இஸ்மாயில்

தச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், முகமது இஸ்மாயில். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த சில வருடங்களாக பி.ஜே.பி கூடாரத்தில் அதிகமாகத் தென்படுகிறார். கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் கொண்டுவந்ததாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை வானளாவப் புகழ்ந்துதள்ளுகிறார். தேர்தல் நேரத்தில் லெட்டர்பேடு கட்சித் தலைவர்கள்கூட சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அமைதியாக இருக்கும் முகமது இஸ்மாயிலைச் சந்தித்துப் பேசினோம்.

“அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாகச் செயல்படும்போது, நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே?”

“அமைதியாக இருக்கிறோம் என்று யார் சொன்னது? நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட ஒரு சீட்டு கேட்டிருக்கிறோம். அநேகமாக, சென்னையில் வாய்ப்புக் கிடைக்கலாம்!”

“தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. அதில் உங்கள் கட்சியின் பெயரே இல்லையே?”

“என்னது தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதா? (அதிர்ச்சியாகிறார்). அப்படி முடிந்தாலும், எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்குவார்கள் என்று நம்புகிறோம்.”

[X] Close

[X] Close