முட்டிக்கொண்ட தலைவர்கள், முட்டுக் கொடுத்த அழகிரி! | Intra party Clash starts in Kanniyakumari Congress party meet - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

முட்டிக்கொண்ட தலைவர்கள், முட்டுக் கொடுத்த அழகிரி!

கன்னியாகுமரியில் தொடங்கிய காங்கிரஸ் களேபரம்...

மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்பதைவிட, ‘தமிழ்நாடு காங்கிரஸ் கோஷ்டி’ என்பதுதான் பொருத்தமாக இருக்கும். காங்கிரஸ் கட்சியினரைக் கேட்டால், ‘இது உட்கட்சி ஜனநாயகம்’ என்பார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த ‘ஜனநாயகம்’ அதிகரிக்கும். இம்முறை கோஷ்டி உரசல் கன்னியாகுமரியில் தொடங்கியிருக்கிறது. இது, எங்கு போய் முடியும் என்றுதான் தெரியவில்லை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 13-ம் தேதி வரவிருக்கிறார். அதற்கான இடம் தேர்வு, கூட்ட ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு,  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்தனர். அனைவரும் ஒற்றுமையுடன் மேடையேறியதைப் பார்த்தத் தொண்டர்கள்  ‘பரவாயில்லையே...’ என நினைத்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே முட்டல் மோதல் பேச்சுகள் தொடங்கிவிட்டன.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் வசந்தகுமார், ஏற்கெனவே தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டார். குமரியைப் பூர்வீகமாகக் கொண்டவரும் திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளருமான காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரனும் கன்னியாகுமரியைக் குறிவைத்து காய்நகர்த்திவருகிறார். இதுபோல வேட்பாளர் கனவில் இருப்பவர்களும் அந்தக் கூட்டத்தில் ஆஜராகியிருந்தனர்.

கூட்டத்தில் பேசிய இளங்கோவன், “கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸுக்குப் பெற்றுத்தர வேண்டும் என்று புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அழகிரியிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதி கிடைக்கவில்லை என்பதற்காக ஒருகாலத்தில் கன்னியாகுமரி மாவட்டத் தொண்டர்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்குள் புகுந்து போராட்டம் நடத்திய வரலாறு எல்லாம் உண்டு. இம்முறை அப்படி ஒரு போராட்டத்துக்கு அழகிரி இடம்தரமாட்டார் என நினைக்கிறேன்” என்று அழகிரியை அதிரவைத்தார்.

[X] Close

[X] Close