அ.தி.மு.க வாக்குவங்கி சரிந்துவிட்டது - நல்லகண்ணு அதிரடி | ADMK vote bank collapsed - says Nallakannu | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

அ.தி.மு.க வாக்குவங்கி சரிந்துவிட்டது - நல்லகண்ணு அதிரடி

மிழகத்தில் பெரிய கட்சிகளான அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் தங்கள் தலைமையின்கீழ் கூட்டணிகளை அமைத்து, தேர்தலுக்குத் தயாராகிவிட்டன. நாடாளுமன்றத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கும் சூழலில், தி.மு.க தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.
 
“அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியைக் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஏற்படுத்தி னீர்கள். இப்போது தி.மு.க-வுடன் சேர்ந்துவிட்டீர்களே?’’

“தற்போதைய அரசியல் சூழல் வேறானது. மத்தியில் பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது. அதற்கு, கருத்தியல்ரீதியில் பலம்வாய்ந்த கூட்டணி தேவை. அப்படிப்பட்ட ஓர் அணியைத் தான், தி.மு.க தலைமையில் அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணி, காலத்தின் தேவை.  பி.ஜே.பி-யை வீழ்த்தக்கூடிய பலமுள்ள அணி இது.”

“ஜெயலலிதா, ‘மோடியா, இந்த லேடியா?’ என்று துணிச்சலாகக் கேட்டவர். ஆனால், மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டுமென்று அ.தி.மு.க இப்போது தீவிரமாக இயங்குகிறதே?”

“தங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள, இதைத் தவிர இவர்களுக்கு வேறு வழி இல்லை. மத்தியில் எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென்று பி.ஜே.பி நினைக்கிறது. அ.தி.மு.க-வோ, மத்திய பி.ஜே.பி-யின் தயவு இருந்தால்தான் தமது அரசைத் தக்கவைக்க முடியும் என்று நினைக்கிறது. எனவே, பி.ஜே.பி-யை விழுந்து விழுந்து ஆதரிக்கிறார்கள். அது ஒரு கொள்கையற்ற கூட்டணி.”

“வாக்குவங்கி அடிப்படையில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி, பலம் வாய்ந்த கூட்டணி என்று சொல்கிறார்களே?”

“ஜெயலலிதா இருந்த காலத்தில், அ.தி.மு.க-வுக்கு அந்த வாக்குவங்கி இருந்தது. இப்போது, அந்தக் கட்சியின் வாக்குவங்கி சரிந்துவிட்டது. அது, இன்றைக்கு பலம் இழந்துள்ளது. ஜெயலலிதா போன்ற ஆளுமையும் இப்போது அங்கு இல்லை.” 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close