சித்திரைத் திருவிழா... சிக்கலில் மதுரை தேர்தல்! | Lok Sabha Polling date of madurai in trouble - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

சித்திரைத் திருவிழா... சிக்கலில் மதுரை தேர்தல்!

மிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்குவதுதான். இதனால், மதுரையில் தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று அனைத்துக் கட்சிகளுமே கலெக்டரிடம் முறையிட்டுள்ளன.

மதுரையில் சாதி, மதபேதமில்லாமல் சித்திரை திருவிழாவை மக்கள் கொண்டாடிவருகிறார்கள். வரும் ஏப்ரல் 15-ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்குகிறது. 16-ம் தேதி அம்மன் திக் விஜயம்,
17-ம் தேதி திருக்கல்யாணம், 18-ம் தேதி தேரோட்டம் மற்றும் கள்ளழகருக்கு எதிர் சேவை, 19-ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. லட்சக்கணக்கான மக்கள் கூடும் இத்திருவிழா நாளில், மக்களால் எப்படி வாக்களிக்க முடியும் என்கிற கேள்விப் பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது.

இதுபற்றிப் பேசிய ஆன்மிகச் சொற்பொழிவாளர் சண்முகத்திருக்குமரன், “திருவிழாவில் அன்னதானம், நீர்மோர் உள்ளிட்ட சேவைகளைப் பக்தர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்படும். இதை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம். தேர்தல் கெடுபிடிகளால் சிரமம் ஏற்படும். எனவே மதுரை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தேர்தல் தேதி அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

[X] Close

[X] Close