இரண்டு கோடி ரூபாயுடன் மாயமானாரா மடாதிபதி? | Sri Gnanananda Giri trust Madathipathi escapes with two crore money? - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

இரண்டு கோடி ரூபாயுடன் மாயமானாரா மடாதிபதி?

ஆபத்தான நிலையில் ஸ்ரீ ஞானானந்த கிரி அறக்கட்டளை...

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகிலுள்ள தென்னாங்கூர் பாண்டுரங்கர் ஆலயம் மற்றும் குருஜி மருத்துவமனையை நிர்வகிக்கும் ஸ்ரீஞானானந்த கிரி அறக்கட்டளையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் கசிகின்றன. மேலும், இதன் மடாதிபதி இரண்டு கோடி ரூபாயுடன் மாயமாகிவிட்டதாகவும், அறக்கட்டளையின் மருத்துவமனை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அறக்கட்டளைக்கு நெருக்கமானவர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள், “ஜோதிர் மடப் பரம்பரையில், ஆறாவது பீடாதிபதியான சத்குரு ஸ்ரீஞானானந்த கிரி சுவாமிகளின் சீடரான ஸ்ரீஹரிதாஸ் கிரி சுவாமிகள், தன் குருஜியின் பெயரில் 1982-ம் ஆண்டு இந்த அறக்கட்டளையைத் தொடங்கினார். அதன்கீழ் பாண்டுரங்கர் ஆலயம், ஏழைமக்கள் பயனடையும் வகையில் குருஜி தொண்டு மருத்துவமனை ஆகியவை கட்டப்பட்டன. ஹரிதாஸ் கிரி மறைவுக்குப் பிறகு, அவரின் சிஷ்யர் ஞாமாஜி மடாதிபதி ஆனார். 2011-ம் ஆண்டு ஞாமாஜியும் மறைந்தார். இவர்கள் இருக்கும்வரை மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டது. கோயிலில் அன்னதானமும் சிறப்பாக நடந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close