ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமிக்கும் நீர்நிலைகள்? - வழக்குத் தொடுத்தவருக்குக் கொலைமிரட்டல்... | Person gets life threat for filing case against Adhiparasakthi Siddhar Peetam - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமிக்கும் நீர்நிலைகள்? - வழக்குத் தொடுத்தவருக்குக் கொலைமிரட்டல்...

நீதிமன்றங்கள் பலமுறை கண்டனம் தெரிவித்தும்கூட, நீர்நிலைகளை அழித்துக் கட்டடங்கள் கட்டப்படும் போக்கு பல இடங்களில் தொடர்கிறது. ஆக்கிரமிப்பில் உள்ள சாமானிய மக்களின் குடிசையை அகற்றுவதில் அரசு எந்திரம் காட்டும் வேகம், அதிகாரம் படைத்தவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் இருப்பதில்லை. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்குச் சொந்தமான அறக்கட்டளையின் கீழ் செயல்படும் நிறுவனங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்குச் சொந்தமான அறக்கட்டளை மூலம் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை இயங்குகின்றன. மேலும், இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமாக வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்களும் உள்ளன. இவற்றில் பல அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளன என்று, அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

“மேல்மருவத்தூர் அடிகளாரின் குடும்பத்துக்குச் சொந்தமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட அறக்கட்டளையின் பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், வணிகக் கட்டடங்கள், வாகன நிறுத்துமிடம், சித்தர் பீடத்தின் சில பகுதிகள் ஆகியவை அரசுப் புறம்போக்கு நிலங்களிலும், நீர்நிலைகளிலும் கட்டப்பட்டுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close