“வாங்க சார்... வணக்கம், ஜீரோ பார்த்துக்கோங்க!” - கைதிகள் நடத்தும் பெட்ரோல் நிலையங்கள்... | Reformation of Prisoners: Prisoner run petrol bunks - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

“வாங்க சார்... வணக்கம், ஜீரோ பார்த்துக்கோங்க!” - கைதிகள் நடத்தும் பெட்ரோல் நிலையங்கள்...

திப்புமிக்க சமுதாய வாழ்வில் சிறைக் கைதிகள் அடியெடுத்துவைக்க, பெட்ரோல் நிலையங்களை அமைத்து நாட்டுக்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது தமிழக சிறைத்துறை. வேலூர், கோவை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் சிறைக் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்களை, கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் திறந்துவைத்தார். இதற்காக, தமிழகச் சிறைத்துறை, இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

வேலூரில் திறக்கப்பட்டுள்ள பெட்ரோல் நிலையத்தில், 15 நன்னடத்தைக் கைதிகள் வேலை செய்கிறார்கள். இவர்களைக் கண்காணிக்க 11 சிறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் நிலையம் செயல்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தொகையாக நாளொன்றுக்கு நூறு ரூபாய் வழங்கப்படுகிறது.

கைதிகளின் முகங்களில் மகிழ்ச்சியைக் காண முடிகிறது. நீல நிறச் சீருடை அணிந்து, வாடிக்கையாளர்களிடம் கணிவாகப் பேசி பெட்ரோல், டீசல் போடுகின்றனர், கைதிகள்.

[X] Close

[X] Close