பொள்ளாச்சி பயங்கரம்... பொதுமக்கள் சொல்வது என்ன? | Pollachi Sexual abuse case: What Public says? - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

பொள்ளாச்சி பயங்கரம்... பொதுமக்கள் சொல்வது என்ன?

குலைநடுங்கவைக்கிறது பொள்ளாச்சி பாலியல் கொடூரம். பாதிக்கப்பட்ட பெண்களின் கதறலைக் கேட்டு ஒட்டு மொத்தச் சமூகமும் விக்கித்துக் கிடக்கிறது. பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் திகிலடைந்துகிடக்கிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆறுதலுக்குக்கூட வழியில்லாமல் அவமானத்தில் தவிக்கிறார்கள். காதலின் பெயரிலும் நட்பின் பெயரிலும் துரோகம் இழைக்கப்பட்ட அந்தப் பெண்கள் உடல், மன வேதனைகளில் அரற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டும். இது பொள்ளாச்சியில் நடந்தது என்று நாம் கடந்துவிடக்கூடாது. நாளை நம் ஊரிலும் நடக்கலாம். ஏன், நமக்குத் தெரியாமலேயே ஏற்கெனவே நம் ஊரில் எங்கோ ஒரு மூலையில் இத்தகைய கொடூரம் அரங்கேறிக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற அக்கிரமங்களை எதிர்த்து நாம் ஒவ்வொருவரும் குரல் கொடுப்பது அவசியம். சரி, இந்தச் சம்பவம் குறித்து என்ன சொல்கிறார்கள் பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close