அரசு மருத்துவர் இல்லை... குழந்தையுடன் கருப்பையும் இழந்த தாய்! | Villuppuram: Medical neglect alleged in baby's death - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/03/2019)

அரசு மருத்துவர் இல்லை... குழந்தையுடன் கருப்பையும் இழந்த தாய்!

ருத்துவத் துறையின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலேயே குழந்தையையும் கருப்பையையும் இழந்து தவிக்கிறார், 22 வயதான இளம்பெண் கிரிஜா.

விழுப்புரம் மாவட்டம், கெடார் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மனைவி கிரிஜா. இவருக்கு, மார்ச் 4-ம் தேதி நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட, கெடார் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை. இதனால், நர்ஸ்களே இரவு முழுவதும் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஆனால், மறுநாள் காலை ஆறு மணியளவில், ‘குழந்தை இறந்தே பிறந்தது’ என்று சொன்னதுடன், ‘கிரிஜாவுக்கு ரத்தப் போக்கு நிற்கவில்லை. உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுங்கள்’ என்று கூறி, 108 ஆம்புலன்ஸில் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங் களில், “கருப்பையை அகற்றவில்லையென்றால் உயிருக்கு ஆபத்து” என்று சொல்லி, கருப்பையை அகற்றிவிட்டார்கள்.  தொடர்ந்து தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகிறார் கிரிஜா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close