பணியிட மாறுதலுக்கு மூன்று லட்சம் ரூபாய்? - பரிதவிக்கும் லேப் டெக்னீஷியன்கள்! | Bribe for Lab Technician Transfer - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

பணியிட மாறுதலுக்கு மூன்று லட்சம் ரூபாய்? - பரிதவிக்கும் லேப் டெக்னீஷியன்கள்!

லேப் டெக்னீஷியன் பதவிக்கான காலிப் பணியிடங்கள், நீதிமன்ற வழக்கு உட்பட பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு நிரப்பப்பட்டன. இப்போது, அவர்களின் பணியிட மாற்றத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


சுகாதாரத்துறையில் 2018 அக்டோபர் மாதம் லேப் டெக்னீஷியன்கள் எனப்படும் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் (ஆய்வக நுட்புணர்கள் என்ற பெயரில் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்) 687 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களில் 387 பேர் நடமாடும் மருத்துவக் குழுவிலும், மீதமுள்ளவர்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பணியமர்த்தப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு எட்டாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் இவர்கள் பணியாற்றவேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நடமாடும் மருத்துவக் குழுவுக்கும், நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கும் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close