“உச்ச நீதிமன்றமே எங்களை நிர்பந்திக்க முடியாது” - என்.ராம் அதிரடி | The Hindu N.Ram Exclusive interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

“உச்ச நீதிமன்றமே எங்களை நிர்பந்திக்க முடியாது” - என்.ராம் அதிரடி

ரஃபேல் விவகாரம்... ஆவணங்கள் கொடுத்தது யார்?

ன்றைக்கு காங்கிரஸ் அரசின் போஃபர்ஸ் ஊழலை வெளிக்கொண்டுவந்ததும், இன்றைக்கு ரஃபேல் விமான விவகாரத்தை விவாதமாக்கியதும் பத்திரிகைகள்தான். ஆனால், இரு அரசுகளும் இவற்றை எதிர்கொள்ளும் விதத்தில்தான் எக்கச்சக்க வித்தியாசங்கள். இவை இரண்டையும் எதிர்கொண்ட பத்திரிகையாளர் ‘தி இந்து’ என்.ராம். அவரிடம் இதுகுறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ரஃபேல் விமான விவகாரம் ஊழலா, முறைகேடா?”

“ஊழல் என்பது லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல. முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஒழுக்கமும், பொதுச் சொத்தை செலவழிப்பதில் நேர்மையும் இல்லாமல் இருந்தால், அதுவும்கூட ஊழல்தான். அந்த வகையில், ரஃபேல் விவகாரம் ஊழல்தான்.”

[X] Close

[X] Close