மிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

மிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்!

ப்ளூ ஜீன்ஸ் பேன்ட், கருப்பு டி ஷர்ட் உடன் வந்த கழுகாரிடம், ‘‘இதெல்லாம் ராகுல் காந்திக்குத்தான் நன்றாயிருக்கும்!’’ என்று கலாய்க்க, ‘‘காஸ்ட்யூமில் என்ன இருக்கிறது... கருத்துகள் எப்படி இருக்கின்றன என்பதுதான் முக்கியம். அதைவிடும்... ராகுல் காந்தியின் தமிழக வருகை, இளைய தலைமுறையிடம் ‘ஸ்கோர்’ செய்திருப்பதாக உற்சாகத்தில் இருக்கிறது, தி.மு.க கூட்டணி’’ என்றார் கழுகார்.

‘‘ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் பெரிதாக உற்சாகத்தைப் பார்க்க முடிய வில்லையே!’’

‘‘அதற்குக் காரணம் இருக்கிறது... கடந்த 13-ம் தேதி நாகர்கோவில் மட்டுமே வருவதாக முதலில் தகவல் சொல்லப்பட்டது. அவர் எதற்காக வருகிறார், எங்கு செல்கிறார் என்ற எந்த விவரங்களும் மாநிலத் தலைமைக்கே தெரியவில்லையாம். ராகுல் காந்தியின் வருகைக்கு முதல்நாள்தான், ‘கல்லூரியில் பேசப்போகிறார், அதுமுடிந்த பிறகு பிரஸ்மீட் ஏற்பாடு செய்யவும்’ என ராகுல் காந்தியின் உதவியாளர்களில் ஒருவரான பிஜு மூலம் தமிழகத் தலைமைக்குத் தகவல் வந்துள்ளது. ‘எப்போது கல்லூரியில் பேசினார்கள், யார் செய்த ஏற்பாடு?’ என எந்த விவரமும் தெரியாமல் அப்செட் ஆகிவிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி!’’

‘‘கல்லூரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யாராம்?’’

‘‘நீட்டா டிசோசா என்கிற மகிளா காங்கிரஸ் நிர்வாகிதான். இதற்காக அவர் ஏற்கெனவே சென்னைக்கு வந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்துமுடித்துள்ளார். அது தமிழக காங்கிரஸ் கட்சியினருக்குத் தெரியாமல் நடந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக, இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை ராகுல் காந்தியை வைத்து டெல்லியில் இருந்து ஒரு டீம் நடத்தி வருகிறது. கல்லூரி நிகழ்ச்சிக்கு கட்சியினர் யாரும் வரக்கூடாது என்று தெளிவாகச் சொல்லி விட்டார்களாம். ‘நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்’ என்ற அடையாள அட்டையுடன் மாணிக் தாகூர், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்டோர் மட்டும் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியை ராகுல் காந்தியின் சமூகவலைதளங்களில் ஒளிபரப்ப, டெல்லியிலிருந்து ஒரு டீம் தனியாக வந்துள்ளது.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close