யாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு! | Discuss about Parliament Election Contestants - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

யாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கெல்லாம் வேட்பாளர் வாய்ப்பு என்பது குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை. கடந்த இதழின் தொடர்ச்சி இது...

 கன்னியாகுமரி:  அ.தி.மு.க கூட்டணியில் சிட்டிங் எம்.பி-யான பி.ஜே.பி-யின் பொன்.ராதாகிருஷ்ணன்தான் மீண்டும் வேட்பாளர் என்கிறார்கள். தி.மு.க கூட்டணியில், இந்தத் தொகுதியைக் குறிவைத்து கபடி போட்டி,  வேலைவாய்ப்பு முகாம் என்று நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான வசந்தகுமார். இவருக்கு எதிர்ப்பும் வலுத்திருக்கிறது. குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான பிரின்ஸ், வசந்தகுமாருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். மேலும், வசந்தகுமாருக்கு செக் வைக்க, குமரியைப் பூர்வீகமாகக்கொண்ட சென்னை தொழிலதிபர் ரூபி மனோகரனை சிலர் களமிறக்கினர். அதற்கும் எதிர்ப்புக் கிளம்பியது. ராபர்ட்புரூஸ், நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர் அசோகன் சாலமன் ஆகியோரும் சீட்டுக்காக மோதுகிறார்கள்.

தி.மு.க முகாமில் முன்னாள் எம்.பி-யான ஹெலன் டேவிட்சன், குமரி கிழக்கு மாவட்டப் பொருளாளர் கேட்சன், மேற்கு மாவட்டச் செயலாளர் மனோ தங்கராஜ், மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் ஆகியோர் முட்டிமோதுகிறார்கள். சி.பி.எம் போட்டியிடும் சூழல் ஏற்பட்டால், முன்னாள் எம்.பி-யான பெல்லார்மின், மாவட்டச் செயலாளர் செல்லசாமி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். 

[X] Close

[X] Close