வேட்பாளருக்குத் திண்டாடும் புதுச்சேரி காங்கிரஸ்! - விரக்தியில் தொண்டர்கள்... | Puducherry Congress Candidate selection issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

வேட்பாளருக்குத் திண்டாடும் புதுச்சேரி காங்கிரஸ்! - விரக்தியில் தொண்டர்கள்...

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பிரசார வியூகம் மற்றும் பணப் பரிமாற்றம் என்று சூறாவளியாகச் சுழல ஆரம்பித்துவிட்டன, புதுச்சேரி எதிர்க்கட்சிகள். ஆனால், ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியோ, இன்னும் வேட்பாளரைத் தேடிக்கொண்டிருக்கிறது.

இதுகுறித்து, 10.02.2019 தேதியிட்ட ஜூ.வி இதழில், “பரபரக்கும் புதுச்சேரி கட்சிகள்.. பதுங்கும் காங்கிரஸ் தலைவர்கள்!” என்ற தலைப்பில் எழுதியிருந்தோம். தற்போது, தேர்தலுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையிலும், வேட்பாளருக்கு வலைவீசும் படலம் காங்கிரஸில் தொடர்கிறது. போட்டியிட முதலில் விருப்பம் தெரிவித்த சபாநாயகர் வைத்திலிங்கம், ‘சுமார் ரூ.40 கோடி செலவாகும்... அதில் கொஞ்சம்கூட கட்சிக் கொடுக்காது’ என்றதும் பின்வாங்கிவிட்டார் என்கின்றனர், கட்சிக்காரர்கள்.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் பேசியபோது, “முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் இருந்தது. ஆனால், ‘எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.பி தேர்தலில் நிற்கக் கூடாது’ என்கிற ராகுல் காந்தியின் உத்தரவால், இவர்கள் பின்வாங்கிவிட்டனர். அதே நேரத்தில், தமிழகத்திலிருந்து வேட்பாளரை இறக்குமதி செய்ய புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவுசெய்தனர். அதன்படி, தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகனை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்துவதற்கு தூது அனுப்பினர். ஆனால், ‘ஒரு வேட்பாளரைக்கூட நிறுத்த முடியாத அளவுக்குத்தான் இத்தனை வருடங்களாகக் கட்சி நடத்துகிறீர்களா?’ என்று கட்சி மேலிடம் கடுமை காட்டிவிட்டது. அதனால், அந்த முடிவையும் கைவிட்டனர்” என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close