‘உங்கள் தலைவர் சொல்லாவிட்டால் தளபதி முதல்வராக மாட்டாரா!’ | DMK alliance Parties Dissatisfaction on DMK - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

‘உங்கள் தலைவர் சொல்லாவிட்டால் தளபதி முதல்வராக மாட்டாரா!’

கறார் தி.மு.க... கதறும் கட்சிகள்!

“தி.மு.க தலைமை, நாற்பது தொகுதிகளையும் அள்ளிவிடுவோம் என்கிற அசாத்திய துணிச்சலில் இருப்பதால், கூட்டணிக் கட்சிகளைக் கண்ணியம் இல்லாமல் நடத்துகிறது. கருணாநிதி இருந்தபோது, கூட்டணிக் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட சுயமரியாதை துளியும் தற்போது இல்லை” என்கிற புகைச்சல் தி.மு.க கூட்டணிக்குள் எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியினர், “தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்பு நடந்துகொண்ட விதமும், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பின்பு நடந்துகொள்கிற விதமும் கூட்டணி கட்சித் தலைவர்களைப் பெரிதும் வேதனையடைய வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி எண்ணிக்கை உடன்படிக்கையில் கறார் காட்டியது தி.மு.க. கடைசியில் மூன்று மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகே இறங்கிவந்தது. 10 தொகுதிகள் என்று முடிவான பிறகு, எந்தெந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்கிற பேச்சுவார்த்தைத் தொடங்கியது. அப்போது காங்கிரஸ் கொடுத்த தொகுதிகள் பட்டியலை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு தொகுதிக்கும் ஏதோ காரணங்களைச் சொல்லி முட்டுக்கட்டை போட்டது தி.மு.க. எரிச்சலடைந்த எங்கள் தலைவர்கள், ‘டெல்லியில் பேசிவிட்டு வருகிறோம்’ என்று கிளம்பிவிட்டார்கள்” என்றார்கள்.

[X] Close

[X] Close