“அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு இல்லை!” | Eight lane green corridor affected people not vote to ADMK alliance - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

“அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு இல்லை!”

எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் போர்க்கொடி

சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் வேலைகளின்போது சேலத்தில் அதிகாரிகளின் நடவடிக்கையைத் தடுக்க முயன்ற உண்ணாமலை பாட்டியை போலீஸார் சுற்றி வளைத்த காட்சியை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. தமிழகமே அதிர்ந்த தருணம் அது. திட்டத்திலிருந்து அரசுகளும் பின்வாங்குவதாகத் தெரியவில்லை. மக்களும் தங்களின் எதிர்ப்பைக் கைவிடுவதாக இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது... சரி, என்ன சொல்கிறார்கள் அந்த மக்கள்? நேரில் சென்றோம்.

சேலம் மாவட்டம் அடிமலைபுதூரில் வசிக்கும் உண்ணாமலை பாட்டியைச் சந்தித்தோம். ‘‘22 வருடங்களுக்கு முன்னாடி மூணு குழந்தைகளை விட்டுட்டு, என் புருஷன் இறந்துட்டாரு. யார் உதவியும் இல்லாமல், இந்தக் காட்டுல வெள்ளாமை பண்ணி, பசங்களை வளர்த்து, கல்யாணம் செஞ்சி வெச்சேன். எனக்கும் என் பிள்ளைகளுக்கும் உசுரு கொடுத்த தெய்வம், இந்த ஆறரை ஏக்கர் காடு. தாய் மடியில கடப்பாரையைக் குத்துறமாதிரி, வெவசாய நெலத்துல எட்டு வழிச் சாலைக்கு முட்டுக்கல் நட்டாங்க. கதறித் துடிச்சேன். இரக்கம் இல்லாம நூறு போலீஸ்காரங்க என்னைச் சுத்திவளைச்சு, வேன்ல தூக்கிட்டுப்போய் போலீஸ் ஸ்டேஷன் அடைச்சு வெச்சுட்டு, என் காட்டை அளந்துட்டாங்க. இப்படிக் கொடூர மனம் படைச்சவங்களுக்கு நாங்க ஏன் ஓட்டு போடணும்? கண்டிப்பா இவங்களுக்கு எங்க ஓட்டு கிடையாது’’ என்றார் ஆக்ரோஷமாக.

[X] Close

[X] Close