நாம் ஒவ்வொருவரும் அரசியல்வாதிகளே! | Youngsters conduct Grama Sabha meeting - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

நாம் ஒவ்வொருவரும் அரசியல்வாதிகளே!

க.பழனித்துரை

தேர்தல் நேரம் இது. அனைவரின் கவனமும் அரசியல் கட்சிகளின் மீதே இருக்கும். சமீபத்தில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. தமிழகம் முழுவதுமிருந்து சுமார் 60 இளைஞர்கள் ஒன்றுகூடினர். ‘கிராம விடுதலைக்காக பஞ்சாயத்துகளை வலுப்படுத்துவோம்’ என்ற குறிக்கோளுடன் ஜே.சி.குமரப்பா குடிலில் திரண்டவர்கள், தமிழகத்தில் முன்மாதிரியாகச் செயல்படும் பஞ்சாயத்துகள் குறித்து, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். கொட்டாம்பட்டி ஒன்றியத்தின் கம்பூர் பஞ்சாயத்து இளைஞர்கள்தான், இப்படியான ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஒரு புதிய சமூகத்தை, புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே காந்தியின் கனவுக் கிராமம். அந்த மையப்புள்ளியில் நின்று இயங்கியது, அந்த இளைஞர் கூட்டம். இவ்வளவு தேர்தல் பரபரப்புகளுக்கு இடையிலும் எந்த அரசியல் தலைமையின் ஈர்ப்பும் வெறுப்பும் அவர்களிடம் இல்லை. அவர்களின் நோக்கம் கிராம மக்களிடம் ஒற்றுமையை வளர்ப்பது, கிராம முன்னேற்றம் குறித்துப் புரிதலை ஏற்படுத்துவது, அரசாங்கத்தைப் புரிந்துகொள்வது, அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவது, அரசாங்கத்தைச் செயல்பட வைப்பது, அரசாங்கத்தை வேலைவாங்குவது, கிராம மக்களிடம் அரசாங்கத்தின் மீதான பயத்தை, சந்தேகங்களை, தயக்கங்களைப் போக்குவது ஆகியவைதான்.

[X] Close

[X] Close