“தமிழை வளர்க்க ஏன் முயற்சி எடுக்கவில்லை?” - நீதிமன்றம் வைத்த குட்டு | Madurai HC Condemned about Tamil Language growth - Junior vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

“தமிழை வளர்க்க ஏன் முயற்சி எடுக்கவில்லை?” - நீதிமன்றம் வைத்த குட்டு

‘‘தமிழக அரசு, தமிழை வளர்க்க அரும்பாடுபடுவதாகப்  பெருமையாகச் சொல்லிக்கொள்கிறது. ஆனால், அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

‘மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் திறக்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேலாகியும் தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. அங்குள்ள நூலகத்தில் தரமான நூல்களும் இல்லை’ என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ‘தமிழின் பெருமையை உணரவில்லையென்றால், வரும் தலைமுறைகள் தமிழைச் சிறப்பாக எடுத்துச்செல்ல முடியாது. வெளிநாடுகளில் தமிழைச் சிறப்பாக எடுத்துச் செல்லும் நிலையில் தமிழ்நாட்டில் தமிழை வளர்க்க ஏன் முயற்சிகள் எடுப்பதில்லை, தமிழ் வழிப் பள்ளி மூடப்படுவது ஏன்?’ என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது.

[X] Close

[X] Close