“தவற்றை நிரூபித்தால் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்” - ‘பார்’ நாகராஜ் வாக்குமூலம் | Bar Nagaraj interview about Pollachi sexual abuse case - Junior Vikat | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

“தவற்றை நிரூபித்தால் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்” - ‘பார்’ நாகராஜ் வாக்குமூலம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியதற்காக அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார் ‘பார்’ நாகராஜ். இவர், தன்மீது அவதூறு பரப்புவோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முறையிட, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார். அவரிடம் நாம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உங்களுக்கு எப்படிப் பழக்கம்?”

“பொள்ளாச்சி ஒரு சிறிய ஊர் என்பதால், பெரும்பாலும் எல்லோருமே ஒருவகையில் நண்பர்கள்தான். பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனும் எனக்குப் பழக்கம்தான். திருநாவுக்கரசு, ஃபைனான்ஸ் செய்பவன். நான் பிசினஸ் செய்பவன். எனவே, வியாபாரரீதியான பழக்கம். சதீஸும், வசந்தகுமாரும் அப்படித்தான். சபரிராஜன் மட்டும் எனக்குப் பழக்கமில்லை. அவரின் தந்தை அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர். எங்கள் வார்டு. எங்கேயாவது பார்த்தால் பேசுவோம், அவ்வளவுதான். அவர்கள் இந்தக் காரியங்களில்  ஈடுபட்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.”

[X] Close

[X] Close