கல்விக்கு நிதி ஒதுக்கீடு... -‘ஆறு’ என்ன ராசி நெம்பரா? - எத்தனை காலம்தான் ஏமாற்றப்போகிறார்கள்? | Discuss about Rahul Gandhi's Speech in Chennai College - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/03/2019)

கல்விக்கு நிதி ஒதுக்கீடு... -‘ஆறு’ என்ன ராசி நெம்பரா? - எத்தனை காலம்தான் ஏமாற்றப்போகிறார்கள்?

செந்தில் ஆறுமுகம், சமூக செயற்பாட்டாளர்

“கல்வி குறித்து காங்கிரஸின் கொள்கை என்ன?” சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், மாணவிகளுடன் ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடலில் அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி இதுதான். நிறையப் பேசியவர், “கல்விக்காக இந்திய அரசு ஒதுக்கும் தொகை மிகக் குறைவாக இருக்கிறது. இது அதிகரிக்கப்பட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறு சதவிகிதம் நிதி ஒதுக்குவோம்” என்று பதில் அளித்தார். அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகிதத் தொகையைக் கல்விக்காக ஒதுக்குவோம் என்று சொல்லிக் கைத்தட்டல் பெற்றார் ராகுல் காந்தி. இந்தப் பதிலைக் கேட்கும்போது நல்ல விஷயம்தானே என்று தோன்றும். ஆனால், இன்னொரு கேள்வியை அந்த மாணவி கூடுதலாகக் கேட்டிருந்தால், ராகுல் காந்தி தர்மசங்கடத்தில் நெளிந்திருப்பார். என்ன கேள்வி அது? ‘இந்தியாவை ஐம்பது ஆண்டுகளுக்கும்மேல் ஆட்சி செய்த காங்கிரஸ், தனது ஆட்சிக் காலங்களில் கல்விக்காக
ஜி.டி.பி-யில் எத்தனை சதவிகிதம் ஒதுக்கியது, கடந்த காலங்களில் நீங்கள் கொடுத்த வாக்குறுதியின்படி ஆறு சதவிகிதத்தை ஏன் ஒதுக்கவில்லை?” என்பதே அந்தக் கேள்வி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க