RTI அம்பலம்: எப்படி இருக்கின்றன தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்? | RTI status of Lactating mothers rooms in TN - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/03/2019)

RTI அம்பலம்: எப்படி இருக்கின்றன தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்?

- நேரடி மற்றும் ஆர்.டி.ஐ ஆய்வு...

‘அம்மாவின் வழியில் ஆட்சி செய்கிறோம்’ என்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள். ஆனால், ஜெயலலிதா தொடங்கிவைத்த பெரும்பாலான திட்டங்கள் கவனிப்பாரின்றிக் கிடக்கின்றன. ‘குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்காக பேருந்து நிலையங்களில் தனியறை வேண்டும்’ என்ற நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, 2015-ம் ஆண்டில் பல்வேறு நகரங்களின் பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகளை அமைத்தார் ஜெயலலிதா. ஆனால், பல இடங்களில் அவை கவனிப்பாரின்றி, பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளன. இதுகுறித்து புகார்கள் வரவே, ஜூ.வி தகவல் உரிமைச் சட்டக் குழுவும், நிருபர்கள் குழுவும் களமிறங்கி தகவல்களைத் திரட்டியது. அதன் ரிப்போர்ட் இதோ...