இப்போது பொள்ளாச்சி... அப்போது சுருளிமலை... | Surulimalai sexual harassment and murder case - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/03/2019)

இப்போது பொள்ளாச்சி... அப்போது சுருளிமலை...

பாலியல் குற்றவாளிகளைத் தப்பவைக்கும் பலே ‘எக்ஸ்பர்ட்’ பாண்டியராஜன்!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தனது பொறுப்பற்ற செயல்களால், நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு உள்ளாகியிருக்கும் கோவை எஸ்.பி பாண்டியராஜனுக்கு சர்ச்சைகள் புதிதல்ல. திருப்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய ஈஸ்வரி என்ற பெண்ணை நடுரோட்டில்வைத்து கன்னத்தில் அறைந்து இவர் நடத்திய அத்துமீறலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. இது மட்டுமல்ல... எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, சுருளி மலையில் ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து, காதல் ஜோடியைக் கொலை செய்த வழக்கையும் பாண்டியராஜன் மூடி மறைக்கப் பார்த்திருக்கிறார். அப்போதும் ஜூனியர் விகடன் இதழில் இதுகுறித்து விரிவாகப் புலனாய்வுக் கட்டுரையை எழுதியதால், வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, குற்றவாளிக்கு 2018-ம் ஆண்டு தூக்குத்தண்டனையும் கிடைத்திருக்கிறது.