“கோஷ்டிப்பூசல் வேறு... ஆட்சி மாற்றம் வேறு!” - கராத்தே தியாகராஜன் ‘பன்ச்’ | Karate Thiagarajan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/03/2019)

“கோஷ்டிப்பூசல் வேறு... ஆட்சி மாற்றம் வேறு!” - கராத்தே தியாகராஜன் ‘பன்ச்’

பெயருக்கு ஏற்ப பேச்சிலும் அதிரடியைக் கிளப்புபவர் கராத்தே தியாகராஜன். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான இவர், ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?”

“இது வெற்றிக் கூட்டணி. மோடியின் ஆட்சியை அகற்ற வேண்டும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. எனவே, இந்தக் கூட்டணி தமிழகத்தில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றிபெற்று, 2004-ம் ஆண்டு வரலாற்றை மீண்டும் கொண்டுவரும்.”