அ.தி.மு.க முடிந்து போன கட்சி! - பொளோர் வெற்றிவேல் | AMMK Vetrivel interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/03/2019)

அ.தி.மு.க முடிந்து போன கட்சி! - பொளோர் வெற்றிவேல்

ரண்டாம் ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது அ.ம.மு.க. பெரியதாகக் கூட்டணி சேர்க்காமல், எஸ்.டி.பி.ஐ-யை மட்டும் வைத்துக்கொண்டு சுயபரிசோதனையில் இறங்கியிருக்கிறார், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். பரபரப்பான தேர்தல் அரசியலுக்கு இடையே, தினகரனின் தளபதிகளில் ஒருவரும், சென்னை வடக்கு மாவட்டச் செயலாளருமான வெற்றிவேலிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

“கட்சி தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. எப்படி உணர்கிறீர்கள்?”

“ஓராண்டு முழுவதும் போராட்டக் களம்தான். அம்மா உயிருடன்தான் இருந்தார் என்று வீடியோ ஆதாரம் வெளியிட்டதற்காக என்மீது வழக்குப் பாய்ந்தது. அடுத்து, எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலைத் துறை ஊழலை  வெளியிட்டதற்காக, இன்னொரு வழக்கு போட்டார்கள். எடப்பாடி, பன்னீரின் ஆட்டம் இந்தத் தேர்தலுடன் முடிந்துவிடும்.”