“பதவியை பர்சேஸ் செய்து விட்டார்!” - ராமநாதபுரம் முஸ்லிம் லீக் சர்ச்சை... | Ramanathapuram Muslim League party issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/03/2019)

“பதவியை பர்சேஸ் செய்து விட்டார்!” - ராமநாதபுரம் முஸ்லிம் லீக் சர்ச்சை...

ராமநாதபுரம் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கியதால், தொகுதியை எதிர்பார்த்திருந்த தி.மு.க-வினர் அதிருப்தியில் உள்ளனர். மூத்த நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டு, கொரியர் நிறுவன உரிமையாளரான நவாஸ் கனியை வேட்பாளராக அறிவித்ததால், முஸ்லிம் லீக் கட்சிக்குள்ளும் அதிருப்தி எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக முதலில் தி.மு.க-வினரிடம் பேசினோம். “கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தொழில் அதிபரான ஜலீல் என்பவர் தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டார். ஆனால், அவரைக் கட்சியினரும், மக்களும் ஏற்றுக்கொள்ளாததால் தோல்வியடைந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் ம.ம.க சார்பில் ஜவாஹிருல்லா ராமநாதபுரம் தொகுதியில் நிறுத்தப்பட்டார். அவரும் தோல்வியடைந்தார். அதனால்தான், ‘இந்தத் தேர்தலில் தி.மு.க-வே போட்டியிட வேண்டும்; அதுவும் உள்ளூர் வேட்பாளர்களுக்குத்தான் வாய்ப்பளிக்க வேண்டும்’ என்று ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், ராமாநாதபுரம் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கியதாக அறிவித்தார்கள். தொடர்ந்து இதே தவற்றைச் செய்வதால், இது அ.தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிடும்’’ என்றார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க