தேர்தலைப் புறக்கணிக்கும் கடலூர் மக்கள்! | Cuddalore People decided to Boycott Election for Sustenance issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/03/2019)

தேர்தலைப் புறக்கணிக்கும் கடலூர் மக்கள்!

- என்.எல்.சி... ஹைட்ரோ கார்பன்... சுருக்கு வலை!

ஹைட்ரோ கார்பன் திட்டம், என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கம் ஆகியவற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலானா கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து, அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதியில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும். நிலக்கரி சுரங்கம் அமைக்க 40 கிராமங்களில் வளமான விவசாய நிலங்களை நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் கையகப்படுத்த உள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சுருக்குவலைப் பயன்பாட்டால், 29 கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.