வீடு புகுந்து மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர்... தூக்கில் தொங்கிய இளம் பெண்! | Girl suicide for ADMK person Threatened in Kanjipuram - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/03/2019)

வீடு புகுந்து மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர்... தூக்கில் தொங்கிய இளம் பெண்!

உயிரைப் பறித்த சாதிவெறி...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கொலைசெய்யப்பட்ட மேலாளர் சங்கரராமனின் மருமகனும் அ.தி.மு.க பிரமுகருமான கண்ணன் என்பவர், காதல் விவகாரம் தொடர்பாக ஒரு பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து கட்டப்பஞ்சாயத்து செய்ததால், அந்த இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார் அ.தி.மு.க பிரமுகரைக் கைது செய்துள்ளனர். 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவரின் மகள் கல்பனாவும், சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த துரை என்பவரின் மகன் ஸ்ரீகரனும் காதலித்துவந்தனர். இதற்கு ஸ்ரீகரனின் பெற்றோர் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. காரணம், இருவரும் வெவ்வேறு சாதியினர். இந்தநிலையில்தான் ஸ்ரீகரனின் குடும்பத்தினர், கல்பனாவின் வீட்டுக்கு ஆட்களை அனுப்பிக் கொலை மிரட்டல் விடுத்ததால் விரக்தியடைந்த கல்பனா, தற்கொலை செய்துகொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க