மதுரையில் தொடரும் மணல் கொள்ளை! - துணைபோகிறார்களா அதிகாரிகள்? | Continuous Sand Robbery in Madurai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/03/2019)

மதுரையில் தொடரும் மணல் கொள்ளை! - துணைபோகிறார்களா அதிகாரிகள்?

துரை திருமங்கலம் அருகே வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வாங்கிவிட்டு, அதிகாரிகள் ஆதரவுடன் மணல் கடத்துகின்றனர். இந்த மணல் கொள்ளைக்கு தாசில்தாரே துணைபோகிறார் என்றும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு விசிட் அடித்தோம். கள்ளிக்குடியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது, சென்னம்பட்டி கிராமம். அங்கிருந்து பட்டப்பகலிலேயே நூற்றுக்கணக்கான லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு வெளியே செல்கின்றன. உண்மை நிலவரம் என்ன என்பதை விசாரித்தோம்.