“அமைச்சர் வீரமணி, கிருஷ்ணரைபோல எனக்கு தேரோட்டுகிறார்!” - நெஞ்சம் உருகும் ஏ.சி.சண்முகம்... | Pudhiya Neethi Katchi AC Shanmugam interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/03/2019)

“அமைச்சர் வீரமணி, கிருஷ்ணரைபோல எனக்கு தேரோட்டுகிறார்!” - நெஞ்சம் உருகும் ஏ.சி.சண்முகம்...

அ.தி.மு.க கூட்டணியில், புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்தை எதிர்த்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். ‘காஸ்ட்லி’ வேட்பாளர் என்று கருதப்படும் ஏ.சி.சண்முகத்தைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘கடந்த தேர்தலில், இதே தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டீர்கள். இம்முறையோ, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறீர்கள். ஏன் கூட்டணிக் கட்சியான பி.ஜே.பி-யின் தாமரை சின்னம் மீது நம்பிக்கை இல்லையா?

‘‘இரட்டை இலை சின்னம், என் தாய்வீட்டுச் சீதனம். அ.தி.மு.க-விலிருந்து விலகி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிக்குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறேன். ஆரணி சட்டமன்றத் தொகுதி மற்றும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஏற்கெனவே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளேன். தாய் கழகத்தில் மீண்டும் இணைந்ததால், இரட்டை இலை சின்னத்தை ஆவலுடன் கேட்டுப் பெற்றிருக்கிறேன்.’’