வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி! | Thenkasi Lok Sabha constituency current status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/03/2019)

வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி!

விறுவிறு வி.ஐ.பி - தென்காசி (தனி)

தென் மாவட்டங்களில் இருக்கும் ஒரே தனித்தொகுதி  தென்காசி. நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளையும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியது தென்காசி நாடாளுமன்றத் தொகுதி. இப்போதைய நிலையில், தொகுதியில் மும்முனைப் போட்டி உருவாகி இருக்கிறது.