பிரான்ஸின் ‘அற்புதம்’ அம்மாள்! - 62 ஆண்டு போராட்டத்துக்குக் கிடைத்த நீதி... | Algeria professor killed in France - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/03/2019)

பிரான்ஸின் ‘அற்புதம்’ அம்மாள்! - 62 ஆண்டு போராட்டத்துக்குக் கிடைத்த நீதி...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தன் மகன் பேரறிவாளனைக் காப்பாற்ற போராடிவருகிறார், அற்புதம் அம்மாள். இதேபோல, பிரான்ஸ் நாட்டில் தன் கணவரின் கொலைக்கு, பிரான்ஸ் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று 62 ஆண்டுகளாகப் போராடிவந்த அல்ஜீரியப் பெண்ணுக்கு நீதி கிடைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரோன், அந்தப் பெண்ணின் கணவர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல், மன்னிப்பும் கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், போரின்போது காணாமல்போனது அந்தப் பெண்ணின் கணவர் மட்டுமல்ல; சுமார் 850 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அல்ஜீரியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றியவர், மௌரிஸ் ஆடின். இவரின் மனைவி ஜோசெட். 1957-ல் மௌரிஸ், டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, அல்ஜீரியாவில் விடுதலைப் போர் மூண்டது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த  கொடூரமான அடக்குமுறைகளைக் கையாண்டது பிரான்ஸ் அரசு. இடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மௌரிசும், அல்ஜீரியாவின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க